முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது!

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒப் டி ப்ளீட் வசந்த கரன்னாகொட, லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்து, பிரித்தானிய கடற்படை அகடமிக்கு பயிற்சிப் படிப்புக்காக அனுப்பியமை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிப்பதற்காக அவர் இன்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். அங்கு அவரிடம் முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணை மற்றும் வாக்குமூலம் பதிவின் பின்னர், லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் இவ்வாறு அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
Follow & Share




