வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வவுனியாநகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று காலை வெளியாகியன.
அதனடிப்படையில் வவுனியா கந்தசாமி கோவில் வீதியில் உள்ள வியாபார நிலையங்களில் பணிபுரியும் 3 பேருக்கு தொற்றிருக்கின்றமை உறுதி செய்யப்பட்டது.
குறித்த எண்ணிக்கையுடன் வவுனியா நகர்பகுதியில் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 151தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.