யாழ். சிறுப்பிட்டியில் இ.போ.ச. பஸ் விபத்து

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து இன்று (ஜன 13) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும், விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 750ஆம் இலக்க வழித்தட பஸ் ஒன்றே பருத்தித்துறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது, சிறுப்பிட்டி பகுதியில் வைத்து அதன் வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வாகன திருத்தகத்தினுள் நுழைந்து விபத்தில் சிக்கியுள்ளது.

இதன்போது விபத்துக்குள்ளான பஸ் மற்றும் வாகன திருத்தகத்தினுள் நின்ற வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.