ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவர் இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான ரகித ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோருக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இன்று வரையான காலப்பகுதிக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இவர்கள் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
Follow & Share




