LATEST
மாத இறுதியில் எரிபொருள் விலை திருத்தம் சாத்தியம் – அமைச்சர் அனுர கருணாதிலக்க விமான விசாரணையில் நாமல் ராஜபக்ஷ மீது புதிய நடவடிக்கை! NPP-க்கு ஆட்சி கிடைத்தாலும் முழு அரச அதிகாரம் இன்னும் இல்லை என பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இன்ஜின், பவர் செட் பற்றாக்குறையால் ரயில் சேவைகள் பாதிப்பு – 27 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த எச்சரிக்கை! 2020 தோல்வியை மறந்து நியூயார்க்கில் மகுடம் சூடிய ஸ்வரேவ்! மத்திய கிழக்கு பதற்றம் எண்ணெய் சந்தையை மீண்டும் உலுக்கியது! ஆசியக் கிண்ணம் வென்ற இந்தியா கிண்ணத்தை பெற மறுப்பு – பரிசளிப்பில் பெரும் சர்ச்சை! இன்றும் வானிலை மோசமடையும் வாய்ப்பு! மாத இறுதியில் எரிபொருள் விலை திருத்தம் சாத்தியம் – அமைச்சர் அனுர கருணாதிலக்க விமான விசாரணையில் நாமல் ராஜபக்ஷ மீது புதிய நடவடிக்கை! NPP-க்கு ஆட்சி கிடைத்தாலும் முழு அரச அதிகாரம் இன்னும் இல்லை என பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இன்ஜின், பவர் செட் பற்றாக்குறையால் ரயில் சேவைகள் பாதிப்பு – 27 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த எச்சரிக்கை! 2020 தோல்வியை மறந்து நியூயார்க்கில் மகுடம் சூடிய ஸ்வரேவ்! மத்திய கிழக்கு பதற்றம் எண்ணெய் சந்தையை மீண்டும் உலுக்கியது! ஆசியக் கிண்ணம் வென்ற இந்தியா கிண்ணத்தை பெற மறுப்பு – பரிசளிப்பில் பெரும் சர்ச்சை! இன்றும் வானிலை மோசமடையும் வாய்ப்பு!
விளையாட்டு

2020 தோல்வியை மறந்து நியூயார்க்கில் மகுடம் சூடிய ஸ்வரேவ்!

September 14, 2026 · National Tamil LK

நியூயார்க்கில் நடைபெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் (Alexander Zverev) அமெரிக்காவின் பென் ஷெல்டனை (Ben Shelton) வீழ்த்தி செம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

இதன் மூலம் அமெரிக்க ரசிகர்கள் மற்றும் பென் ஷெல்டனின் கிராண்ட் ஸ்லாம் கனவு தகர்க்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் 6-3 7-6 (2) 5-7 6-2 என்ற செட் கணக்கில் ஸ்வரேவ் அபார வெற்றி பெற்றார்.

முதன்மை வரிசை (Top Seed) வீரராகக் களம் கண்ட ஸ்வரேவ் நேற்றைய வெற்றியின் மூலம், இந்த ஆண்டில் தனது இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

முன்னதாக இந்த ஆண்டின் பிரெஞ் பகிரங்கப் பட்டத்தையும் அவர் வென்றிருந்தார்.

அதேநேரம் 2020-ஆம் ஆண்டு அமெரிக்க பகிரங்க மென்னிஸ் ஆடவர் இறுதியில் தோல்வியைத் தழுவிய ஸ்வரேவ் இந்த முறை பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

Related Stories

Explore More ›